/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வைகை அணை 67 அடியை தாண்டியாச்சு; உசிலம்பட்டிக்கு தண்ணீர் கொடுங்கள்
/
வைகை அணை 67 அடியை தாண்டியாச்சு; உசிலம்பட்டிக்கு தண்ணீர் கொடுங்கள்
வைகை அணை 67 அடியை தாண்டியாச்சு; உசிலம்பட்டிக்கு தண்ணீர் கொடுங்கள்
வைகை அணை 67 அடியை தாண்டியாச்சு; உசிலம்பட்டிக்கு தண்ணீர் கொடுங்கள்
ADDED : அக் 29, 2025 07:43 AM
மதுரை:  'வைகை அணையில் நீர்க் கொள்ளளவு 67 அடியை எட்டியதும் 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும். தற்போது 69.8 அடியை எட்டியதால் உடனடியாக திறக்க வேண்டும்' என குறைதீர் கூட்டத்தில் உசிலம்பட்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்கள் கூறியதாவது:
செப். 18 ல் இருந்து திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் திருமங்கலத்திற்கும், பெரியாறு பிரதான கால்வாய் வழியாக மேலுாருக்கும் தினமும் 1100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வைகை பழைய பாசனத்திற்காக  ராமநாதபுரம் பாசனத்திற்கு 5 நாட்கள், அடுத்ததாக சிவகங்கைக்கு 5 நாட்கள், மதுரைக்கு 6 நாட்கள் என தொடர்ந்து 17 நாட்களுக்கு தினமும் 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும்.
அக். 27 முதல் ராமநாதபுரத்திற்கு வைகையாற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்படும் போது வைகை அணையின் நீர்மட்டம் 67 அடிக்கு கீழே சென்று விடும். 67 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே உசிலம்பட்டி 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படும்.  கடந்தாண்டும் தண்ணீர் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தோம். தற்போது அணையில் 69.8 அடிக்கு தண்ணீர் உள்ளது. மழையும் உள்ளதால் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்றனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், '58 கிராம கால்வாய்க்கு 350 மில்லியன் கனஅடி தண்ணீர் விட வேண்டும். இருநாட்களுக்குள் அரசாணை கிடைத்தால் தினமும் 150 கனஅடி வீதம் 30 நாட்களுக்கு  தண்ணீர் திறந்து விடலாம்' என்றனர்.

