sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'ஆன்லைன்' கட்டட அனுமதி பெறுவதில் தில்லுமுல்லு... தில்லுமுல்லு... அரசுக்கு ரூ. பல கோடி வருவாய் இழப்பு

/

'ஆன்லைன்' கட்டட அனுமதி பெறுவதில் தில்லுமுல்லு... தில்லுமுல்லு... அரசுக்கு ரூ. பல கோடி வருவாய் இழப்பு

'ஆன்லைன்' கட்டட அனுமதி பெறுவதில் தில்லுமுல்லு... தில்லுமுல்லு... அரசுக்கு ரூ. பல கோடி வருவாய் இழப்பு

'ஆன்லைன்' கட்டட அனுமதி பெறுவதில் தில்லுமுல்லு... தில்லுமுல்லு... அரசுக்கு ரூ. பல கோடி வருவாய் இழப்பு

1


ADDED : செப் 24, 2025 05:35 AM

Google News

ADDED : செப் 24, 2025 05:35 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் 2500 சதுர அடி நிலத்தில் 3500 சதுர அடி பரப்பில் (தரைத்தளம், மேல்தளத்துடன்) வீடு கட்டுவோர் ஆன்லைன் வழியே விண்ணப்பித்து உடனே அ னுமதி பெறும் திட்டத்தை ஓராண்டுக்கு முன் அரசு அமல்படுத்தியது. விண்ணப்பித்து பல மாதங்களாக காத்திருந்த மக்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாக அமைந்தது.

இத்திட்டத்தை பயன்படுத்தி குடியிருப்புக்காக விண்ணப்பித்த பலர், அந்த இடத்தில் விதிமீறி வணிக ரீதியான கட்டடம் கட்டி முறைகேடில் ஈடுபடுவது தெரியவந்தது. இதைக் கண்காணிக்க வேண்டிய நகரமைப்பு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதை செய்யாமல் கோட்டை விட்டுள்ளனர். பல இடங்களில் அதிகாரிகளுக்கு தெரிந்தும் இம்முறைகேடு அரங்கேறியுள்ளது. இதனால் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்திற்கு ரூ. பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இம்முறைகேடு தொடர்பாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, நகராட்சி நிர்வாக ஆணையர், நகர் ஊரமைப்பு துறை இயக்குநர், மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு புகார் அளிக்கப்பட்டது.

பொறியாளர்கள் சிலர் கூறியதாவது: சில புரோக்கர்கள் மக்களை திசை திருப்பி கட்டட அனுமதி பெற்றுத்தருவதாக கூறி இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். மாநகராட்சியில் பல இடங்களில் விதிமீறி வணிக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மினி கல்யாண மண்டபம் வரைபடம் தயாரித்தும், ஆன்லைன் சான்று பெற்றுத் தருவதாக புகாரும் எழுந்துள்ளது. இதை நகரமைப்பு அதிகாரிகள் கண்காணிப்பதில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில் நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் மாநகராட்சி வழங்கிய அனுமதி விபரங்களை ஆய்வு செய்ய உள்ளனர். இதுபோன்ற முறைகேடை தவிர்க்கபதிவு பெற்ற இன்ஜினியர்கள் மூலம் வரைபடம் தயாரித்து ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். 'செக்யூரிட்டி ரிப்போர்ட்' பெற்று இறுதி வரைபட அனுமதி வழங்க வேண்டும். வரைபட அனுமதியில் விண்ணப்பதாரர் புகைப்படம், இன்ஜினியர் பெயர், அவருடைய லைசென்ஸ் நம்பருடன் இறுதி உத்தரவு கிடைக்கும் வகையிலும் மாற்றம் கொண்டு வரவேண்டும். அப்போது தான் அரசுக்கு ஏற்படும் இழப்பீடை தவிர்க்க முடியும் என்றனர்.






      Dinamalar
      Follow us