sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : மே 25, 2026 09:40 PM

ADDED : மே 25, 2026 09:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 25, 2026 09:40 PM ADDED : மே 25, 2026 09:30 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மே 26

குருப்பெயர்ச்சி * 108 கலசாபிஷேகம்: நவசக்தி விநாயகர் கோயில், டீன் குடியிருப்பு வளாகம், புதுநத்தம் ரோடு, மதுரை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பரிகார பூஜைகள், காலை 9:00 மணி முதல்.

* மாதா அமிர்தானந்தமயி மடம், பசுமலை, ஹோமம், மாலை 6:00 மணி முதல்.

* காட்டுப்பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், காலை 8:30 மணி.

* சர்வேஸ்வரர் கோயில், அண்ணா நகர், மதுரை, ஹோமம், சிறப்பு பூஜைகள், காலை 9:30 மணி முதல்.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.

வைகாசி திருவிழா * மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன் புது மண்டபத்தில் எழுந்தருளல், மாலை 6:00 மணி.

* கள்ளழகர் கோயில், அழகர் கோவில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாளுக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை, மாலை 6:30 முதல் இரவு 7:30 மணிக்குள்.

* முருகன் கோயில்,சோலைமலை, ஷண்முகார்ச்சனை, காலை 11:00 மணிக்கு, அபிஷேகம், மதியம் 3:00 மணி, சுவாமி புறப்பாடு, மாலை 5:00 மணி, தீபாராதனை, மாலை 6:00 மணி.

* ஒன்பதாம் நாள்: ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், பால்குடம் எடுத்து வருதல், காலை 9:00 மணி, அக்னிசட்டி எடுத்து வருதல், மதியம் 2:00 மணி, வைகையாற்றில் பூப்பல்லக்கு, நள்ளிரவு 2:00 மணி.

* எட்டாம் நாள்: திரவுபதி அம்மன் கோயில், தெற்குமாரட் வீதி, மதுரை, பார்வதி அம்மன் அலங்காரத்தில் திருப்பல்லக்கு, காலை 9:00 மணிக்கு மேல், அர்ஜூனன் தபசு கைலாச பர்வதம் சிவன் பார்வதி அலங்காரம், இரவு 7:00 மணிக்கு மேல்.

* கூடழலகர் கோயில், மதுரை, திருப்பல்லக்கில் பெருமாள் உலா, காலை 9:00 மணி, கருட சேவை, இரவு 7:00 மணிக்கு மேல்.

* திருமறைநாதர் சுவாமி கோயில், திருவாதவூர், சப்பரத்தில் அம்மன், சுவாமி எழுந்தருளுதல், காலை 9:00 மணி, ரிஷப வாகனத்தில் அம்மன், சுவாமி எழுந்தருளுதல், இரவு 7:30 மணி.

* பத்ரகாளியம்மன் கோயில், 171, பெரியரத வீதி, திருப்பரங்குன்றம், சிறப்பு பூஜை, இரவு 7:00 மணிக்கு மேல்.

* ராஜகாளியம்மன் கோயில், மேட்டுப்புஞ்சை, சிந்தாமணி, வைகை ஆறு சென்று பால்குடம் எடுத்து அலகுகுத்தி வீதி உலா வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம், அதிகாலை 5:00 மணி, கிருதுமால் நதி சென்று சாமிக்கரகம், அக்னிச்சட்டி எடுத்து பூக்குழி இறங்குதல், இரவு 8:00 மணிக்கு மேல்.

பக்தி சொற்பொழிவு * பெரியபுராணம்: நிகழ்த்துபவர் -- மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* தத்துவமும், வரலாறும்: நிகழ்த்துபவர் -- தமிழ்ச்செல்வி, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி.

* விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் -- சுவாமி நித்ய சத்வானந்தா, சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

பொது * மேலக்குயில்குடியில் அரசால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை போலி பட்டா மூலம் ஆக்கிரமிப்பு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: மதுரை மேற்கு தாலுகா அலுவலகம், அச்சம்பத்து, தலைமை: மாநில துணைத் தலைவர் தவமணி, ஏற்பாடு: தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், காலை 10:00 மணி.

* விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், காலை 10:00 மணி முதல்.

* எஸ்.ஆர்.எம்.யூ., ஓடும் தொழிலாளர்கள் சார்பில் ரயில்வே ஓட்டுநர்களுக்கு போதிய ஓய்வு வழங்காத ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவாயில் அருகில், மதுரை, காலை 11:30 மணி.

* ஹிந்தி பேச்சுப் பயிற்சி சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல் நகர், பயிற்றுநர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.

* ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், புதுார், ஏற்பாடு: மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன், தமிழ்நாடு ஆட்டோ ஸ்கில்ஸ், காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.

* குழந்தைகளுக்கான ஓவியப்பயிற்சி, அபாகஸ் உள்ளிட்ட பயிற்சிகள் -- குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, ஏற்பாடு: பொதுநுாலக இயக்ககம், காலை 11:00 மணி முதல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us