/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தியாகராஜர் பொறியியல் கல்லுாரி விருது வழங்கும் விழா
/
தியாகராஜர் பொறியியல் கல்லுாரி விருது வழங்கும் விழா
தியாகராஜர் பொறியியல் கல்லுாரி விருது வழங்கும் விழா
தியாகராஜர் பொறியியல் கல்லுாரி விருது வழங்கும் விழா
ADDED : செப் 27, 2025 04:27 AM

திருப்பரங்குன்றம்: தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் சிறந்த முன்னாள் மாணவர்கள் 12 பேருக்கு விருது வழங்கும் விழா கல்லூரியில் நடந்தது. ஆட்சிக்குழு உறுப்பினர் உமா கண்ணன் தலைமை வகித்தார்.
தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் படித்த இஸ்ரோ முன்னாள் இயக்குனர்கள் வேதாச்சலம், ஞானகாந்தி, முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் ரவீந்திரன் பலராமன், ஜெய்ப்பூர் எம்.என்.ஐ.டி., இயக்குனர் நாராயண பிரசாத் பதி,
டாடா குழும நிறுவன உறுப்பினர் நாகராஜன், திருவள்ளூர் ஹைட்ரோ கியூப் ஹைட்ராலிக் நிறுவனர் ரகுநாதன் ராமகிருஷ்ணன், பிரமோத்சவ் ஏவுகணை முன்னாள் சி.இ.ஓ. சிவதாணுப்பிள்ளை, சென்னை மெட்ரோ இயக்குனர் அர்ஜூனன், ஜெர்மன் நிறுவன நிர்வாக இயக்குனர் அஜயன் சகாதேவன், இந்திய கடற்படை கமாண்டிங் ஆபீசர் வெங்கடேஷ் குமார், அபுதாபி பிசினஸ் டெவலப்மென்ட் மேலாளர் சிவக்குமார் ஆகியோருக்கு கலெக்டர் பிரவீன் குமார் விருதுகள் வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், ''கல்லுாரி காலம்தான் வாழ்க்கையில் முக்கியமானது. எதிர்காலம் குறித்து சிறந்த முடிவு எடுப்பது இக்காலகட்டத்தில்தான். மாணவர்களுக்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. திறமை மிகுந்த மாணவர்கள் ஏராளமானோர் தமிழகத்தில் உள்ளனர். இந்தாண்டு யு.பி.எஸ்.சி., தேர்வில் தமிழகத்தில் 58 பேர் தேர்வாகியுள்ளனர்'' என்றார்.
கல்லுாரி முதல்வர் அசோக்குமார் வரவேற்றார். முன்னாள் மாணவர் சங்க முதன்மை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் தொகுத்து வழங்கினார்.
பதிவாளர் ராஜாராம் நன்றி கூறினார்.