ADDED : ஜூன் 03, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் தாலுகா சிலைமலைபட்டி ராமகிருஷ்ணன். இவர் தன் நிலத்தை அளக்க வருவாய்த்துறையில் பல முறை மனு அளித்தும் நிலம் அளக்கப்படாததால் உயர்நீதிமன்றம் மதுரை கிளையை அணுகினார்.
உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுப்படி சர்வேயர் ஜெக மணி மே 10ல் இடத்தை அளக்கச் சென்ற போது அருகில் இருந்த நிலத்துக்கு சொந்தக்கார ரான அதே ஊரைச் சேர்ந்த காந்தி மகன் அழகர்சாமி உறவினர்களுடன் அவரை தடுத்தார்.
நேற்று மாலை அந்த நிலத்தை அளக்க தாலுகா அலுவலகத்தில் இருந்து அலுவலர்கள் செல்ல தயாராக இருந்தபோது, அழகர்சாமி தாசில்தார் தனி அறைக்கு சென்று தாசில்தார் முன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அங்கிருந்தவர்கள் தடுத்து அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.