UPDATED : ஜூன் 14, 2026 06:12 PM
ADDED : ஜூன் 14, 2026 06:11 PM
ஜூன் 15
கோயில் * குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.
பக்தி சொற்பொழிவு
* திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
* பகவத்கீதை - சம்பூர்ண பாராயணம்: நிகழ்த்துவோர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.
பள்ளி, கல்லுாரி * பட்டமளிப்பு விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: தாளாளர் மற்றும் செயலாளர் குமரேஷ், சிறப்பு விருந்தினர்: ஸ்டார் குழுமம் சேர்மன் குருசாமி, காலை 11:00 மணி.
பொது * மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் ஆகாஷ், காலை 10:00 மணி.
* சுற்றுலா கலைவிழா 2026: தமுக்கம் மைதானம், மதுரை, கலாகேந்திரா அகாடமியின் பரதநாட்டியம், மதிச்சியம் பாலாவின் இசை நிகழ்ச்சி, ஏற்பாடு: சுற்றுலாத்துறை, மாலை 6:00 மணி முதல்.
மருத்துவம் * உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை.
கண்காட்சி * அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
