/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பார்சல் சர்வீஸ் உரிமையாளர் வெட்டிக்கொலை
/
பார்சல் சர்வீஸ் உரிமையாளர் வெட்டிக்கொலை
ADDED : செப் 13, 2025 04:31 AM

மதுரை: மதுரை பார்க் டவுன் 2-ஆவது தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் 52. முனிச்சாலை பகுதியில் பார்ட்னர் கல்லணையுடன் சேர்ந்து பார்சல் சர்வீஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி சந்திரகலா, சேலம் சட்டக்கல்லுாரியில் படிக்கும் மகன் சந்தீப் உள்ளனர். நேற்றிரவு 9:00 மணியளவில் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு புறப்படுவதாக மனைவிக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்துவிட்டு புறப்பட்டார்.
சிறிது நேரத்தில் பார்க் டவுன் பகுதி கடைக்கு பொருட்கள் வாங்க டூவீலரில் வந்த மனைவி, தனது கணவர் டூவீலருடன் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அருகில் வந்து பார்த்தபோது ராஜ்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருட்டான பகுதியை தேர்வு செய்து ராஜ்குமாரை மர்மநபர்கள் வாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. தொழில் போட்டியா என கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.