/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அ.தி.மு.க., ஆட்சியில் உயர்கல்வி உள்ளிட்ட பல துறைகளில் தேசிய விருது பிரசாரத்தில் பழனிசாமி பெருமிதம்
/
அ.தி.மு.க., ஆட்சியில் உயர்கல்வி உள்ளிட்ட பல துறைகளில் தேசிய விருது பிரசாரத்தில் பழனிசாமி பெருமிதம்
அ.தி.மு.க., ஆட்சியில் உயர்கல்வி உள்ளிட்ட பல துறைகளில் தேசிய விருது பிரசாரத்தில் பழனிசாமி பெருமிதம்
அ.தி.மு.க., ஆட்சியில் உயர்கல்வி உள்ளிட்ட பல துறைகளில் தேசிய விருது பிரசாரத்தில் பழனிசாமி பெருமிதம்
ADDED : செப் 03, 2025 07:26 AM
புதுார் : ''அ.தி.மு.க., ஆட்சியில் உயர்கல்வி உள்ளிட்ட பல துறைகளில் தேசிய விருது வென்றதாக புதுார் பிரசாரத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.
அவர் பேசியதாவது:
அ.தி.மு.க. ஆட்சியில் கட்டடம் பிளான் அப்ரூவல் ஆயிரம் சதுரடிக்கு ரூ.37,800 இருந்ததை தி.மு.க., ஆட்சியில் ரூ.ஒரு லட்சத்து 8 ஆயிரமாக வசூல் செய்கின்றனர். ஸ்காட்லாந்துக்கு இணையாக இருந்த தமிழக காவல் துறைக்கே தற்போது பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. 6 மாதங்களில் 6 போலீசார் கொலை செய்யப்பட்டுள்ளனர். அரசியல் தலையீடுகளால் போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன.
தி.மு.க., ஆட்சியில் 207 அரசுப் பள்ளிகள்மூடப்பட்டுள்ளன. 51 மாதங்களில் ஒரு மருத்துவக் கல்லுாரிகூட கொண்டு வரவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில்உயர்கல்வி, போக்குவரத்து, சமூகநலம் உள்ளிட்ட பல துறைகளில் 140 தேசிய விருதுகள் பெறப்பட்டன. கல்வி, மருத்துவம், நீர்மேலாண்மையில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் இருந்தது.இதுவே சிறந்த நிர்வாகத்துக்கான சான்று.
மதுரை அரசு மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்தது அ.தி.மு.க., ஆட்சியில் தான். தி.மு.க., ஆட்சியில் காலுக்கு சிகிச்சை பெற்ற கால்பந்து வீராங்கனை மருத்துவமனையிலேயே உயிரிழந்த சம்பவம் நடந்தது.மதுரையில் 40 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்னை வராதபடி ரூ.1300 கோடி செலவில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் ஆகியும் அத்திட்டம் முழுமை பெறவில்லை. இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட அ.தி.மு.க.,வின் திட்டங்கள் அனைத்தும் மீண்டும் ஆட்சி அமைந்ததும் தொடரப்படும். அ.தி.மு.க., ஆட்சியில்பல்வேறு திட்டங்களை வழங்கி சிறுபான்மை மக்களை இமைபோல் காத்தது. தி.மு.க.,வினர் பொய் பிரசாரம் செய்கின்றனர்.
இவ்வாறு பேசினார்.
ஒத்தக்கடையில் பழனிசாமி பேசியதாவது:
மதுரை கிழக்கு தொகுதியில், மதுரை கிழக்கு தாலுகா அலுவலகம், எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்ட் முதல் கூடல் நகர் வரை ரூ.50 கோடி மதிப்பீட்டில் ரோடும், புதுார் முதல் நத்தம் வரை 7 கி.மீ பறக்கும் பாலமும் அ.தி.மு.க., ஆட்சியில் தொடங்கி, தி.மு.க., தனது ஸ்டிக்கர் ஒட்டியே திறந்தது. டைட்டல் பார்க் திட்டம் அறிவித்து கிடப்பில் போட்டுவிட்டனர். 276 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டமும், குடிமராமத்துத் திட்டம் மூலம் மாடக்குளம், முத்துப்பட்டி கண்மாய்கள் துார்வாரப்பட்டன. பை பை ஸ்டாலின். என்றார்.