ADDED : மார் 25, 2026 11:35 PM
கோயில் * பங்குனி பிரம்மோற்ஸவம் - 6ம் நாள்: பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், சவுராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, சுவாமி ஆண்டாள் திருக்கோலத்தில் காட்சி, காலை 8:00 மணி, யானை வாகனத்தில் உலா, மாலை 6:30 மணி.
* காஞ்சி மஹா பெரியவர் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி: மஹா பெரியவர் கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, பூஜை செய்வோர்: சந்தோஷ் சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.
பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி, நிகழ்த்துபவர் - வாசிநாதம் அடியார்கள், மாலை 6:00 மணி.
* ராமநவமியை முன்னிட்டு ராமாயண தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் துர்காதேவி, கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.
* திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி * வள்ளல் பொன் பாண்டித்துரை தேவர் ஆய்வரங்கம்: நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ் கலை கீழ்த்திசைக் கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி உதவிப் பேராசிரியர் கணேசன், மதியம் 1:20 மணி.
* இளம் தொழில் முனைவோர் வாய்ப்பு - கருத்தரங்கம்: நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ் கலை கீழ்த்திசைக் கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் சாந்திதேவி, சிறப்புரை: எஸ்.எல்.எஸ்.எம்.ஏ.வி.எம்.எம்., ஆயிர வைசியர் கல்லுாரி உதவிப் பேராசிரியர் நாகராஜன், மதியம் 2:00 மணி.
* மின்சாரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ஸ்ரீனிவாசன், சிறப்பு விருந்தினர்: டான்ஜெட்கோ நிர்வாக பொறியாளர் யோஹானந்தன், காலை 10:00 மணி.
* மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் - சொற்பொழிவு நிகழ்ச்சி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஸ்ரீனிவாசலு, ஏற்பாடு: கல்லுாரி உயர்கல்வி வழிகாட்டுதல் குழு, காலை 10:00 மணி.

