ADDED : ஏப் 10, 2026 11:04 PM
கோயில் * சனிக்கிழமை சிறப்பு பூஜை: கிருஷ்ணன் கோயில், மந்தை திடல், கீழையூர், ஏற்பாடு: கீழையூர் யாதவ மகாசபை, மாலை 6:00 மணி.
* சனிக்கிழமை சிறப்பு பூஜை: கிருஷ்ணன் கோயில், யூனியன் ஆபீஸ் எதிரில், மேலுார், ஏற்பாடு: மேலுார் யாதவ மகாசபை, மாலை 6:00 மணி.
* சத்சங்கம், நாம சங்கீர்த்தனம்: வரதராஜ பெருமாள் கோயில், ஹார்விபட்டி, மாலை 6:00 மணி.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி.
* தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* சத்சங்கம், ஆசிரம பிரார்த்தனை, கீதை பாராயணம்: நிகழ்த்துவோர் - சிருஷ்டி கீதை பாராயணக் குழு, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி.
* நாமத்வாரின் பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு 108 மணி நேரம் அகண்ட மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி முதல்.
* பராபவ ஆண்டு பஞ்சாங்கம் வாசிப்பு, விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி * பட்டமளிப்பு விழா: தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், மதுரை, முன்னிலை: தலைவர் பங்கேரா, சிறப்பு விருந்தினர்: தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி சேஷாயி, மாலை 5:30 மணி.
* பட்டமளிப்பு விழா: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் தசரதராமன், சிறப்பு விருந்தினர்: திருவாரூர் மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன், காலை 9:00 மணி.
பொது * மன்றத்தின் வாழ்நாள் தலைவர் அருணாச்சலம் பிள்ளை பிறந்தநாள் விழா: மதுரை திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, தலைமை: மன்ற ஆலோசனைக்குழு தலைவர் நடராஜன், சிறப்புரை: மன்றத் தலைவர் சுப்பிரமணியன், மன்ற அறக்கட்டளைகள் ஆலோசனைக்குழு தலைவர் ராஜ உமாராணி, மாலை 4:30 மணி.
* குழந்தைகளுக்கான இலவச சதுரங்க பயிற்சி: கலைஞர் நுாலகம், மதுரை, பயிற்சி அளிப்பவர்: உமாசங்கர், மாலை 5:30 மணி, கவுசல்யா, ஞானசுந்தரி ஆகியோர் வழங்கும் இலவச அபாகஸ் பயிற்சி, மாலை 5:30 மணி.
மருத்துவம் * உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு 18 வயதுக்கு மேற்பட்ட இருபாலருக்குமான இரைப்பை, குடல், கல்லீரல் சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம்: ப்ரீதி மருத்துவமனை, உத்தங்குடி, காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.
கண்காட்சி * சித்திரை விற்பனை - பட்டுச் சேலைகள், காட்டன் சேலைகள் கண்காட்சி, விற்பனை: அர்பன் ஸ்பைஸ் கேலரி, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: விவேகானந்தா சாரீஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
