/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தாழ்வாகச் செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகள்
/
தாழ்வாகச் செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகள்
ADDED : செப் 16, 2025 04:41 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே சக்கரப்ப நாயக்கனுாரில் தாழ்வாகச் செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகளை உயர்த்த வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
ஆறுமுகம்: மேலப் பெருமாள் பட்டியிலிருந்து சக்கரப்ப நாயக்கனுார் செல்லும் வழியில் கோழிப்பட்டி பிரிவருகே உயர் மின்னழுத்த கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. அரசு பஸ், விவசாயப் பயன்பாட்டு கனரக வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் இப்பகுதி வழியே சென்று வருகின்றன.
அதிகளவிலான மின்சாரம் செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகள் வாகனங்களில் உரசி விபரீதம் நிகழ வாய்ப்புள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அலட்சியம் காட்டுகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் தாழ்வாக செல்லும் கம்பியை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.