/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
யூரியா பற்றாக்குறையை போக்க கூட்டுறவுத் துறைக்கு அக்கறை இல்லையா: அடுத்த வாரம் ஒருபோக நெல் சாகுபடி தொடங்குகிறது
/
யூரியா பற்றாக்குறையை போக்க கூட்டுறவுத் துறைக்கு அக்கறை இல்லையா: அடுத்த வாரம் ஒருபோக நெல் சாகுபடி தொடங்குகிறது
யூரியா பற்றாக்குறையை போக்க கூட்டுறவுத் துறைக்கு அக்கறை இல்லையா: அடுத்த வாரம் ஒருபோக நெல் சாகுபடி தொடங்குகிறது
யூரியா பற்றாக்குறையை போக்க கூட்டுறவுத் துறைக்கு அக்கறை இல்லையா: அடுத்த வாரம் ஒருபோக நெல் சாகுபடி தொடங்குகிறது
UPDATED : செப் 18, 2025 08:12 PM
ADDED : செப் 18, 2025 04:46 AM

மதுரை: மதுரை மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடிக்கான யூரியா பற்றாக்குறை என விவசாயிகள் தெரிவித்தும் கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
மதுரையில் கிழக்கு, மேற்கு உட்பட 5 வட்டாரங்களில் 3000 ஏக்கர் பரப்பளவிற்கு குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறை மூலம் யூரியா உட்பட பல்வேறு உரங்கள் பெறப்பட்டு கூட்டுறவுத்துறையின் கீழ் உள்ள 174 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உரக்கடைகளில் மானிய விலையில் விற்கப்படுகிறது. தமிழ்நாடு கூட்டுறவு இணையம் (டான்பெட்) மூலம் உரங்கள் பெறப்பட்டு சங்கங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
அவசரத் தேவைக்காக எப்போதும் 100 டன் அளவு யூரியா உரம் இருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால் குலமங்கலம் பகுதி விவசாயிகளுக்கான கூட்டுறவு கடன் சங்கத்தில் பற்றாக்குறையால் ஒரு மாதமாக யூரியா உரம் வழங்கவில்லை. வேறு வழியின்றி கூடுதல் விலைக்கு தனியார் உரக்கடைகளில் யூரியா வாங்கி நெல்லுக்கு மேலுரமாக இட்டு சமாளித்தனர் விவசாயிகள். இதுபோல கிராமப்புற கடன் சங்கங்களில் யூரியாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
சமாளிக்க முடியுமா:
இன்று (செப். 18) மேலுார், திருமங்கலத்தில் ஒரு லட்சத்து 5000 ஏக்கர் பரப்பளவிற்கான ஒருபோக நெல் சாகுபடிக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. வயலில் நாற்று நட்ட 45 நாட்களுக்குள் யூரியா இட வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் தேவையான யூரியா உரம் பற்றாக்குறையின்றி கிடைக்குமா என்று விவசாயிகள் சந்தேகிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
உரம் முழுமையாக கிடைக்கிறதா என்பதை கடன் சங்கங்களிலும் தனியார் உரக் கடைகளிலும் கண்காணிப்பது வேளாண் துறையின் வேலை. கூட்டுறவுத்துறை சார்பில் டான்பெட் துணைப்பதிவாளர், கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கண்காணிக்க வேண்டும். சங்கங்களில் யூரியா இல்லாவிட்டால் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் கூடுதலாக உள்ள சங்கத்தில் இருந்து மூடைகளை ஏற்றி அனுப்பும் செலவை யார் தருவார் என்று மெத்தனமாக தெரிவிக்கின்றனர். இந்நிலை ஒருபோக சாகுபடியிலும் தொடரக்கூடாது என்பதால் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி தட்டுப்பாடின்றி யூரியா கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.