/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திறப்புவிழாவிற்கு காந்தி மியூசியம் தயார் துணைமுதல்வர் உதயநிதி பார்வை படுமா
/
திறப்புவிழாவிற்கு காந்தி மியூசியம் தயார் துணைமுதல்வர் உதயநிதி பார்வை படுமா
திறப்புவிழாவிற்கு காந்தி மியூசியம் தயார் துணைமுதல்வர் உதயநிதி பார்வை படுமா
திறப்புவிழாவிற்கு காந்தி மியூசியம் தயார் துணைமுதல்வர் உதயநிதி பார்வை படுமா
ADDED : செப் 23, 2025 04:30 AM

மதுரை: மதுரை காந்தி மியூ சியத்தில் இரண்டாண்டு களுக்கு முன் தொடங்கிய புனரமைப்பு பணி முடிந்து உள்ள நிலையில் துணை முதல்வர் உதயநிதி பார்வை பட்டால் விரைவில் திறப்பு விழா காணலாம்.
சிறப்பு நிதியின் கீழ் 2023 அக்டோபரில் முதல்வர் ஸ்டாலின் ரூ.10.25 கோடி நிதியை காந்தி மியூசிய புரனமைப்புக்காக ஒதுக்கினார். இந்த வளாகம் 1955 வரை ராணி மங்கம்மாள் அரண்மனையாக இருந்தது. பிரிட்டிஷார் ஆட்சியின் போது பழைய அரண்மனையுடன் கூடுதல் கட்டடம், கூடுதலாக சில கதவு, இணைப்புகள் பொருத்தப்பட்டன.
1955க்கு முன்பிருந்த அரண்மனையின் பழமை மாறாமல் புதுப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டதால் கூடுதலாக பொருத்தப் பட்டிருந்த கதவு, இணைப்புகள் அகற்றப்பட்டன.
பாரம்பரிய முறைப்படி கடுக்காய், சுண்ணாம்பு, வெல்லம் கலந்த கலவை மூலம் அரண்மனையின் முதல் தளத்தில் உள்ள சதுரத்துாண்களுடன் கூடிய தர்பார் பகுதி புதுப்பிக்கப் பட்டது. பாரம்பரிய பொருட்கள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் புனரமைப்பு பணிகளும் இரண்டாண்டுகளாக நடந்தது.
தற்போது பூச்சு வேலை முடிந்த நிலையில் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் பழைய போட்டோக்களை பொருத்தும் பணி தொடர வேண்டும். தர்பார் ஹாலில் டிஜிட்டல் பலகையில் தொட்டால் அடுத்தடுத்த காட்சிகளை பார்க்கும் வகையில் இந்திய விடுதலை வரலாறு குறித்த பதிவுகள் இடம்பெற உள்ளன.
2வது மாடியில் உள்ள ஏ.வி.ஹாலில் காந்தி வரலாறு குறித்த ஆவணப் படம் திரையிடப் படும். இதில் 100 பேர் அமரலாம். இரண்டாவது மாடி வரை புதிதாக லிப்ட் அமைக்கும் பணியும் முடிந்துள்ளது.
அக்.2 காந்தி ஜெயந்திக் குள் பணிகள் முடிப்பது கடினம் என்றாலும் அக்டோபருக்குள் பணிகளை முடித்தால் பார்வை யாளர்கள் பயன்பெறுவர்.
தற்போது காந்தி அஸ்தி உள்ள பகுதி யருகே சிறிய குடிலில் காந்தியின் ரத்தக்கறை படிந்த வேட்டி உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மதுரை வரும் துணைமுதல்வர் உதயநிதி மியூசியத்தை பார்வையிட்டால், அக்டோபரில் திறப்பு விழா காணுவது உறுதி.