ADDED : ஏப் 01, 2026 06:34 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: ஹார்விட்டி எஸ்.ஆர்.வி. நகர் கல்கத்தா காளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
மாலையில் பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. நாளை பால்குடம் எடுத்தும், பொங்கல் வைத்தும், பூச்செட்டி எடுத்தும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்த உள்ளனர். ஏப். 5ல் பூஜை முடிந்தபின் அன்னதானம் வழங்கப்படும்.
