ADDED : மார் 24, 2026 11:17 PM
* ரூ. 70 ஆயிரம் உசிலம்பட்டி தொகுதி திருமங்கலம் விலக்கு பகுதியில் ஆனந்தன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக டூவீலரில் வந்த உசிலம்பட்டி கீழப்புதுார் ரஞ்சித்குமார் போதிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ. 70 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். உதவித் தேர்தல் அலுவலர் மூலமாக அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
* ரூ.68 ஆயிரம் சோழவந்தான் தொகுதியில் வாடிப்பட்டி சர்ச் அருகே நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் நாகராஜா தலைமையில் எஸ்.ஐ., பாபு காந்தி, ஏட்டு காயத்ரி வாகன சோதனை செய்தனர். உசிலம்பட்டி சொக்கர் டூவீலரில் கொண்டு வந்த ரூ.68 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது.
* ரூ. 3.50 லட்சம் உசிலம்பட்டி தொகுதி ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் முத்துமாணிக்கம் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக தேனி மாவட்டம் கருநாக முத்தன்பட்டி ராஜ்குமார் உள்ளிட்ட 6 பேர் காரில் வந்தனர். காரில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ. 3 லட்சத்து 50 ஆயிரத்து 830 ஐ பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
