/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த துணை முதல்வர்
/
மதுரை வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த துணை முதல்வர்
ADDED : செப் 25, 2025 03:14 AM

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி நேற்று ஆய்வு நடத்தினார்.
அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், அரசு கூடுதல் தலைமை செயலர்கள் பிரதீப்யாதவ், அதுல்யமிஸ்ரா, கூடுதல் செயலர் உமா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி, மேயர் இந்திராணி, எம்.பி.,க்கள் தங்கத்தமிழ்ச்செல்வன், மாணிக்கம் தாகூர், வெங்கடேசன், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் நடக்கும் பணிகளை 2026 தேர்தலுக்கு முன்பாக விரைந்து முடிக்க உதயநிதி அறிவுறுத்தினார்.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனுக்களுக்கு உடனே தீர்வு காண உத்தரவிட்டார்.
அவரிடம் மேலமடை சந்திப்பு பாலம் நவம்பருக்குள், கோரிப்பாளையம் பாலம் டிசம்பருக்குள், அதில் செல்லுார் பிரிவு பாலம் மார்ச்சுக்குள் முடிவடையும் என்றனர். குறித்த காலத்தில் முடிக்க உதயநிதி அறிவுறுத்தினார். ஆதிதிராவிடர் நலத்துறையில், 'விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை, பயோமெட்ரிக் பயன்பாடு' குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் தேனுார் சென்ற அவர், அங்குள்ள கட்டப்புளி நகரில் கட்டப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள், திருநங்கையருக்கான வீடுகளை டிசம்பருக்குள் முடிக்க அறிவுறுத்தினார். இவ் வீடுகளை 2026 ஜனவரியில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு வரும் முதல்வர் ஸ்டாலின் திறக்க உள்ளார்.