/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி குப்பை வண்டிகளின் 500 சாவிகள் திருட்டு; ஒப்பந்த நிறுவனம் - துாய்மை பணியாளர்கள் மீண்டும் மோதல்
/
மாநகராட்சி குப்பை வண்டிகளின் 500 சாவிகள் திருட்டு; ஒப்பந்த நிறுவனம் - துாய்மை பணியாளர்கள் மீண்டும் மோதல்
மாநகராட்சி குப்பை வண்டிகளின் 500 சாவிகள் திருட்டு; ஒப்பந்த நிறுவனம் - துாய்மை பணியாளர்கள் மீண்டும் மோதல்
மாநகராட்சி குப்பை வண்டிகளின் 500 சாவிகள் திருட்டு; ஒப்பந்த நிறுவனம் - துாய்மை பணியாளர்கள் மீண்டும் மோதல்
ADDED : செப் 18, 2025 05:56 AM

மதுரை : மதுரை மாநகராட்சியில் துாய்மை பணி மேற்கொள்ளும் 'அவர்லேண்ட்' நிறுவனத்திற்கும், துாய்மை பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக குப்பை அள்ளுவதற்காக மாநகராட்சி வாகன காப்பகத்தில் வண்டிகளின் 500 சாவிகள் காணாமல் போனதாக நிறுவனம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
மாநகராட்சி துாய்மை பணிகள் ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலி யுறுத்தியும், அவர்லேண்ட் நிறுவனத்தின் சில அலு வலர்களை கண்டித்தும் சி.ஐ.டி.யு., வி.சி., உள்ளிட்ட துாய்மை பணி யாளர் சங்கங்கள் போராட்டம் நடத்தின. அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா ஆகியோர் இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்தி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் வண்டிகளில் டீசல் திருடியதாக சில பணியாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதை கண்டித்து நேற்று முன்தினம் சில டிரைவர்கள் பணிக்கு செல்லவில்லை. மாற்று டிரைவர்களை பணியில் ஈடுபடுத்த நிறுவனம் முயற்சித்ததால், ஒப்பந்த பணியாளர் களுடன் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. கமிஷனர் சித்ரா சமரசம் செய்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை மாநகராட்சி செல்லுார் வாகன காப்பக அலுவலகத்தில் புகுந்து துாய்மைப் பணிக்கு புறப்பட தயாராக இருந்த 500 குப்பை வண்டிகளின் சாவியை சிலர் எடுத்துச் சென்றதாக நிறுவனம் சார்பில் அஸ்வின் என்பவர் செல்லுார் போலீசில் புகார் அளித்தார்.
நிறுவன மேலாளர் பிரசாந்த், மாநகராட்சியில் 600 டன்னுக்கு மேல் குப்பை தேங்கியுள்ளது. சாவிகள் கிடைத்தால் தான் பணிகள் மேற்கொள்ள முடியும் என்றார்.
சி.ஐ.டி.யு., செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், பணியாளர்கள் மீதான நிறுவனத்தின் புகார் அவதுாறானது. இதுகுறித்து நாங்களும் போலீசில் புகார் அளித்துள்ளோம். 3 ஆயிரம் துாய்மை பணி யாளர்களுக்கு ரூ.56 லட்சம் வரை சம்பளம் குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை கேட்டதால் பிரச்னையை திசை திருப்பு கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு நடத்தி குறைந்த சம்பளத்தை பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளனர் என்றனர்.