ADDED : மே 16, 2026 05:41 AM

அ நிறம் | அளவு
மதுரை: பெட்ரோல், டீசல் விலை உயர்வையும், நீட் தேர்வையும் ரத்து செய்யக் கோரி மதுரையில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜான்சிராணி பூங்கா முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர் தலைவர் நல்லமணி தலைமை வகித்தார்.
மகளிர் காங்., மாநில தலைவி ராமலட்சுமி முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் கார்த்திகேயன், முருகன், வி.முருகன், நகர் துணைத் தலைவர்கள் செய்யதுபாபு, சுப்பையா, ராஜா முகமது, நிர்வாகிகள் வரதராஜன், பாலு, மீர் பாட்ஷா, பொருளாளர் பாட்ஷா, மகளிரணி நிர்வாகி பஞ்சவர்ணம், அஷ்டலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
