/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோரிப்பாளையத்தில் சர்வீஸ் ரோடுக்காக கட்டடங்கள் இடிப்பு
/
கோரிப்பாளையத்தில் சர்வீஸ் ரோடுக்காக கட்டடங்கள் இடிப்பு
கோரிப்பாளையத்தில் சர்வீஸ் ரோடுக்காக கட்டடங்கள் இடிப்பு
கோரிப்பாளையத்தில் சர்வீஸ் ரோடுக்காக கட்டடங்கள் இடிப்பு
ADDED : ஜூன் 20, 2025 12:26 AM

மதுரை: மதுரை கோரிப்பாளையம் மேம்பால பணியில் சர்வீஸ் ரோடு அமைப்பதற்காக அருகில் நிலம் கையகப்படுத்திய இடங்களில் இருந்த கட்டடங்களை அகற்றும் பணி நடந்தது.
மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190 கோடி மதிப்பில் 3.5 கி.மீ., மேம்பாலம் நெல்பேட்டை வரை அமைய உள்ளது.
இப்பணியில் பாலத்தின் கீழ் சர்வீஸ் ரோடு அமைப்பதற்காக கோரிப்பாளையத்தில் ரோட்டின் இருபுறமும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக கோர்ட்டில் நடந்த வழக்குகளும் முடிவுக்கு வந்தன.
இந்நிலையில் மேம்பாலத்தின் கீழ் அமைய உள்ள சர்வீஸ் ரோடுக்காக அமெரிக்கன் கல்லுாரி பகுதியில் இருந்த மாநகராட்சி கட்டடங்கள் நேற்று இடிக்கப்பட்டன. இதில் மினிபஸ்கள் வந்து நிற்கும் பகுதியில் மாடியுடன் 10 கடைகள் செயல்பட்டன. அவை அப்புறப்படுத்தப்பட்டு நேற்று இடிக்கப்பட்டன.
நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர் சுகுமாரன், உதவிப் பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மற்ற கடைகளை விரைவில் இடிப்பதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மேம் பாலத்தின் கீழ் தமுக்கம் முதல் சந்திப்பு வரை கல்லுாரி பகுதியில் 7.5 மீ., அகலத்தில் ரோடும், 1.5 மீ., அகலத்தில் வடிகால் வசதி மற்றும் பஸ்நிறுத்தம் (பஸ் பே) அமையும் வகையில் சர்வீஸ் ரோடு அமையும். அதேபோல பாலத்தின் மேற்கு பகுதியில் 10.5 மீட்டர் அகலத்தில் ரோடு, 1.5 மீ., அகல வடிகால் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக நிலம், கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இழப்பீடும் வழங்கப்பட உள்ளது. இந்த இடத்திலும் பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளன.