/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அமைச்சர் ஆய்வு செய்யவிருந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குண்டு மிரட்டல் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவுக்கும் மிரட்டல்

ADDED : அக் 05, 2025 05:57 AM

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தினர். வழக்கம் போல் 'புரளி' எனத்தெரியவந்தது.
நேற்று பிரதோஷம் என்பதால் மீனாட்சி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கும்பாபிஷேக திருப்பணிகளை ஆய்வு செய்ய அறநிலையத்துறை அமைச்சர் கோயிலுக்கு வரவிருந்த நிலையில், 'கோயிலில் குண்டுவெடிக்க போகிறது' என டி.ஜி.பி., அலுவலக இமெயிலுக்கு வந்த மிரட்டல் குறித்து மதுரை நகர் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
அம்மன், சுவாமி சன்னதிகள், தங்க கொடிமரம், அன்னதானம் வழங்கும் பகுதி , தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகள், பக்தர்கள் அலைபேசி வைக்கும் இடம், கோயிலுக்கு முன்பு தேங்காய் பழம் விற்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டு 'புரளி' என உறுதிசெய்தனர்.
பின்னர் மாலையில் அமைச்சர் ஆய்வு செய்தார்.
இதேபோல் திருப்பரங்குன்றம் பள்ளிவாசல், மலை மீதுள்ள தர்காவிலும் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அங்கும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன் தெரிவித்துள்ளதாவது: இருநாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் வீடு, பா.ஜ., தலைமை அலுவலகம் கமலாயம், நடிகை திரிஷா வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தற்போது மீனாட்சி கோயிலுக்கும், திருப்பரங்குன்றம் மலைக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் என்னதான் நடக்கிறது. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மட்டும் தான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருந்தது.
தற்போது திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மலைக்கும் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்கு முன் மத்திய, மாநில அரசுகள் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். வெடிகுண்டு மிரட்டல் கலாசாரத்திற்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.