/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தற்காலிக பாதையின்றி தீவான பாலசுப்பிரமணியன் நகர்

/

தற்காலிக பாதையின்றி தீவான பாலசுப்பிரமணியன் நகர்

தற்காலிக பாதையின்றி தீவான பாலசுப்பிரமணியன் நகர்

தற்காலிக பாதையின்றி தீவான பாலசுப்பிரமணியன் நகர்


ADDED : ஜூன் 02, 2025 01:07 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 01:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநகர்: திருப்பரங்குன்றம் பாலசுப்பிரமணியன்நகர் - திருநகர் இடையே சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணியில், மாற்று பாதையின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

திருநகரில் இருந்து பாலசுப்பிரமணியன் நகர் இடையே நிலையூர் கால்வாயில் அமைத்திருந்த தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்தது. அதனை அகற்றிவிட்டு, ரூ. 15 லட்சத்தில் புதிய பாலம் கட்டும் பணி சில நாட்களுக்கு முன் துவங்கியது.

கிருஷ்ணமூர்த்தி, பாலசுப்பிரமணியன் நகர் குடியிருப்போர் நல சங்கத் தலைவர்: பாலசுப்பிரமணியன் நகரில் இருந்து திருநகர் 7வது பஸ் ஸ்டாப்புக்கு தேவி நகர் வழியாக 3 கி.மீ., செல்ல வேண்டும்.

நடந்து செல்வோருக்காக தற்காலிக அமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

கலெக்டருக்கும் மனு அனுப்பி உள்ளோம். மாணவர்கள் பெரிதும் பாதிப்பர். பாலசுப்பிரமணியன் நகர் மக்கள் தனித்தீவில் உள்ளது போல வசிக்கின்றனர் என்றார்.

சுவேதா, காங்., கவுன்சிலர்: பாலம் கட்டி முடிக்க 2 மாதங்களாகும் எனக் கூறப்படுகிறது. சேதமான பாலத்தை முற்றிலும் அகற்றியபின் 10 நாட்களுக்குப் பின்பே அங்கு பணிகள் நடக்கிறது.

பொதுமக்கள் வசதிக்காக, மற்றொரு தெரு வழியாக தற்காலிக பாதை கேட்டும் தரவில்லை. உதவி பொறியாளர், மண்டல கூட்டத்தில் தெரிவித்தோம். மாநகராட்சி கமிஷனர், மேயர் உடனே தீர்வு காண என்றார்.