ADDED : மார் 26, 2026 07:16 PM
திருமங்கலம்: திருமங்கலம் தொகுதியில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு என 19 குழுக்கள் உள்ளன. கப்பலுார் முதல் கள்ளிக்குடி வரையிலும், கல்லுப்பட்டி பேரையூர் பகுதி வரையிலும், செக்கானுாரணி, கூடக்கோவில் வரையிலும் திருமங்கலம் தொகுதி உள்ளது.
தொகுதி முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் இந்த வாகனங்களுக்கு தினசரி 3 ஷிப்டுகளுக்கும் சேர்த்து 10 லிட்டர் டீசல் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் வாகனங்களை முழு அளவில் இயக்க இயலாமல் ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். மேலும் அலுவலர்கள் சோதனை செய்வதற்காக பல்வேறு இடங்களுக்கும் செல்ல இயலாமல் தவிக்கின்றனர்.
எனவே வாகனத்தை ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டு கண்துடைப்பு பணியாக மட்டுமே சோதனை நடக்கிறது. டீசல் இன்றி பணிகளில் தொய்வு ஏற்பட்டு இருப்பதை மாவட்ட நிர்வாகம் உடனே சரிசெய்ய வேண்டும்.
