/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் சோலார் திட்டத்தில் 11 ஆயிரம் கே.வி., மின் உற்பத்தி
/
மதுரையில் சோலார் திட்டத்தில் 11 ஆயிரம் கே.வி., மின் உற்பத்தி
மதுரையில் சோலார் திட்டத்தில் 11 ஆயிரம் கே.வி., மின் உற்பத்தி
மதுரையில் சோலார் திட்டத்தில் 11 ஆயிரம் கே.வி., மின் உற்பத்தி
ADDED : செப் 27, 2025 04:23 AM

மதுரை: மதுரையில் பிரதம மந்திரி சூரிய வீடு திட்டத்தில் 11 ஆயிரம் கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என விழிப்புணர்வு கூட்டத்தில் கோட்ட கண்காணிப்பாளர் ரெஜினா மேரி தெரிவித்தார்.
மதுரை மூன்றுமாவடியில் பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் அவர் பேசியதாவது: மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 15 ஆயிரம் நுகர்வோரை ஈடுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதில் 2 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.
விரைவில் முழுமையான இலக்கை அடைய அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் ஒத்துழைப்பு தேவை. வீடுகளில் சூரிய மின் உற்பத்தி செய்வோருக்கு 3 கிலோ வாட் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தற்போது மதுரையில் மட்டும் 11 ஆயிரம் கிலோவாட் மின்சாரம் தயாரிக்கிறோம். செப்.17 முதல் அக்.2 வரை சேவைத் திருவிழா மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
மதுரை நகரில் உள்ள 6.60 லட்சம் வீட்டு மின் இணைப்புகளில் 500 முதல் 1000 கிலோவாட் வரை மின்நுகர்வு செய்வோரின் எண்ணிக்கை மட்டும் 70 ஆயிரம். இவர்களை இத்திட்டத்தில் இணைப்பதன் மூலம் பெருமளவு மின்சாரம், பணம் சிக்கனமாகும் என்றார். இத் திட்டத்தில் இணைவோர் ரூ.2 லட்சம் வரை எவ்வித உத்திரவாதமுமின்றி கடன் பெறலாம் என வங்கி அலுவலர்கள் விளக்கினர்.
மதுரை மின்பகிர்மான பெருநகர் வட்டம், தமிழ்நாடு மின்உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடுகளை செய்தன. செயற்பொறியாளர் பாலபரமேஸ்வரி தொகுத்து வழங்கினார்.