ADDED : மே 31, 2026 08:31 PM
அ நிறம் | அளவு
மதுரை: கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இங்கு மே 6 முதல் மே 31 வரை குழந்தைகளுக்கு ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டன. நிறைவு நாளான நேற்று மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சி.இ.ஓ., தயாளன் பயிற்சி பட்டறைகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கும், பயிற்றுநர்களுக்கும் சான்றிதழ் வழங்கினார்.
