ADDED : மே 28, 2026 11:23 PM
வைகாசி திருவிழா
* மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன் புது மண்டபத்தில் எழுந்தருளல், மாலை 6:00 மணி.
* கள்ளழகர் கோயில், அழகர்கோவில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாளுக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை, மாலை 5:00 மணி.
* முருகன் கோயில், சோலைமலை, ஷண்முகார்ச்சனை, காலை 11:00 மணி, அபிஷேகம், மதியம் 3:00 மணி, சுவாமி புறப்பாடு, மாலை 5:00 மணி, தீபாராதனை, மாலை 6:00 மணி.
* தேரோட்டம் – திருமறைநாத சுவாமி கோயில், திருவாதவூர், சுவாமி, அம்மன் தேரில் எழுந்தருளல், காலை 6:00 மணிக்கு மேல் 7:00 மணிக்குள், திருத்தேர் வடம் பிடித்தல், காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள்.
* கூடலழகர் கோயில், மதுரை, பெருமாள் தங்கப்பல்லாக்கில் எழுந்தருளல், காலை 9:00 மணி, தங்கச் சிவிகை, காலை 11:00 மணி, பூச்சப்பரம் சூர்ணோற்ஸவம், இரவு 7:00 மணி.
* ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், சப்பரத்தில் அம்மன் புறப்பாடு, மாலை 5:00 மணி, அபிஷேகம், அலங்காரம், இரவு 7:00 மணி, காமதேனு வாகனத்தில் அம்மன் வீதியுலா, இரவு 9:00 மணி.
* ராஜகாளியம்மன் கோயில், மேட்டுப்புஞ்சை, சிந்தாமணி, மதுரை, குத்துவிளக்கு பூஜை, மாலை 6:00 மணி.
* திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை, துவாஜாவரோஹனம், காலை 9:00 முதல் 10:30 மணி.
கோயில்
* மஹா கும்பாபிஷேகம்: மஹா துர்க்கை அம்மன் கோயில், ராமேஸ்வரம் மெயின் ரோடு, சிலைமான், எஸ்.புளியங்குளம், இரண்டாம் கால யாக பூஜைகள், அதிகாலை 5:00 மணி முதல், விமான கோபுரம், அம்மன், பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம், காலை 7:45 முலை் 9:00 மணிக்குள், அன்னதானம், காலை 9:30 மணி.
* பரிவார தெய்வங்களுக்கு சிலை எடுத்து பெரிய கும்பிடு திருவிழா: புனுகு கருப்பசாமி கோயில், பேரையூர், பெட்டி எடுத்தல், மாலை 4:00 மணி, பேரையூர் கண்மாய் விநாயகர் கோயிலில் இருந்து மேளதாளத்துடன் சிலைகள் எடுத்தல், மாலை 6:00 மணி, கருப்பசாமிக்கு 21 அபிஷேகம், இரவு 10:00 மணி.
* வைகாசி 3ம் வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு புன்னகை அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.
* 3ம் ஆண்டு விழா, அக்னி நட்சத்திரம் நிவர்த்தி, 51 கலசாபிஷேகம்: சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, ருத்ர ஹோமம், அபிஷேகம், தீபாராதனை, மாலை 5:30 மணி.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.
பக்தி சொற்பொழிவு
* திருக்குறள்: நிகழ்த்துபவர் – சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
* வைகாசி விசாக முருகன் அருள்: நிகழ்த்துபவர் – ராதாகிருஷ்ணன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
* பட்டமளிப்பு விழா: மதுரைக் கல்லுாரி, மதுரை, முன்னிலை: கல்லுாரி வாரியத் தலைவர் சீதாராமன், செயலாளர் நடனகோபால், கல்லுாரி முதல்வர் சுரேஷ், சிறப்பு விருந்தினர்: வெங்கடசுப்பிரமணியன், காலை 10:30 மணி.
பொது
* மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ நுால் வாசித்தல்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், அறிமுக உரை: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், பங்கேற்பு: படிப்பிடைப் பயிற்சி மாணவர்கள், காலை 10:30 மணி.
* பக்ரீத் சிறப்பு சர்வ சமய அமைதிப் பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், அருட்செய்தி வழங்குபவர்: சமூக ஆர்வலர் முகமது ரபீக், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம் (செப்சிரா), மாலை 6:00 மணி.
* அனிமேஷன் பயிற்சி – குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, ஏற்பாடு: பொது நுாலக இயக்ககம், காலை 11:00 மணி முதல்.
மருத்துவம்
* மகளிருக்கான இலவச மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, வல்லபாய் ரோடு, சொக்கிகுளம், மதுரை, காலை 10:00 முதல் மதியம் 4:00 மணி வரை.
* தோல் லேசர் நவீன மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.
விளையாட்டு
* திருநகர் கைப்பந்து போட்டி – 2026: கைப்பந்து மைதானம், அண்ணா பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: பேன்யன் பவுண்டேஷன், எம்.ஜி.ஆர்., கைப்பந்து அகாடமி, திருநகர் யூத் கிளப், காலை 6:00 மணி.
* 16 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான 50 ஓவர் கிரிக்கெட் போட்டி: மதுரைக் கல்லுாரி, மாணிக்கம் ராமசாமி கல்லுாரி, ஸ்ரீராம் நல்லமணி பள்ளி, மதுரை, ஏற்பாடு: சேது கிரிக்கெட் பவுண்டேஷன், மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கம், காலை 8:00 மணி.
