ADDED : மே 22, 2026 11:22 PM
வைகாசி திருவிழா * மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன் புது மண்டபத்தில் எழுந்தருளல், மாலை 6:00 மணி.
* ஆறாம் நாள்: ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், சப்பரத்தில் அம்மன் புறப்பாடு, காலை 9:00 மணி, ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா, இரவு 9:00 மணி.
* திருக்கல்யாணம்: திரவுபதி அம்மன் கோயில், தெற்குமாரட் வீதி, மதுரை, காலை 10:30 முதல் மதியம் 12:00 மணிக்குள், திருக்கல்யாண விருந்து, வசந்தபவனம் கல்யாண மண்டபம், 40 அடி ரோடு, புதுமகாளிபட்டி ரோடு, மதுரை, மதியம் 12:00 மணி, புஷ்ப பல்லக்கில் அம்மனும்,சுவாமியும் எழுந்தருளல், இரவு 7:00 மணிக்கு மேல்.
* ராஜகாளியம்மன் கோயில், மேட்டுப்புஞ்சை, சிந்தாமணி, மதுரை, குதிரை வாகனத்தில் அம்மன் வீதியுலா, மாலை 5:00 மணிக்கு மேல்.
* கூடழலகர் கோயில், மதுரை, கொடியேற்றம், காலை 10:31 முதல் 11:30 மணிக்குள், அன்ன வாகனம், இரவு 7:00 மணி.
* திருமறைநாதர் சுவாமி கோயில், திருவாதவூர், சப்பரத்தில் அம்மன், சுவாமி எழுந்தருளுதல், காலை 9:00 மணி, கைலாச வாகனம், காமதேனு வாகனங்களில் அம்மன், சுவாமி எழுந்தருளுதல், இரவு 7:00 மணி.
* சிறப்பு பூஜை: கிருஷ்ணன் கோயில், பஞ்., யூனியன் ஆபீஸ் எதிரில், மேலுார், மாலை 6:00 மணி.
* சிறப்பு பூஜை: கிருஷ்ணன் கோயில், கீழையூர், மாலை 6:00 மணி.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு * தாயுமானவர்: நிகழ்த்துபவர் –- கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: காசி விஸ்வநாதன் நினைவு அறக்கட்டளை, இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
பொது * 137 வது கல்லுாரி நாள் விழா: மதுரைக் கல்லுாரி, மதுரை, தலைமை விருந்தினர்: ஜோஹோ ஸ்கூல்ஸ் ஆப் லேர்னிங் தலைவர் ராஜேந்திரன் தண்டபாணி, முன்னிலை: கல்லுாரி தலைவர் சீதாராமன், முதல்வர் சுரேஷ், மாலை 5:00 மணி.
* உலத்திருக்குறள் பேரவை மதுரை சார்பில் திருக்குறள் அமுதம் சிறப்பு நிகழ்ச்சி: நியூ காலேஜ் ஹவுஸ், மதுரை, தலைமை: தலைவர் கருப்பையா, வாழ்விக்க வந்த வள்ளுவம் சிறப்புரை: ஆல் இந்தியா ரேடியோ முன்னாள் இயக்குநர் சுந்தர ஆவுடையப்பன், மாலை 5:00 மணி.
* டி.என்.பி.எஸ்.சி., மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: கோவிந்த தாஸ சேவா ஸமாஜம், 25, மஹால் 6வது தெரு, மதுரை, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
* கோடை கால யோகா பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், பயிற்சி அளிப்பவர்கள்: தென்றல் யோகா மைய இயக்குநர் தாரணி, சிபி யோகாலயா நிறுவனர் சிபி சக்கரவர்த்தி, பெண்களுக்கு, காலை 10:30 மணி, ஆண்களுக்கு, மாலை 4:30 மணி.
* படிப்பிடைப் பயிற்சி மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய பொருளாளர் செந்தில்குமார், சான்றிதழ் வழங்குபவர்: சோகோ அறக்கட்டளை இணை இயக்குநர் செல்வகோமதி, காலை 11:00 மணி.
* குழந்தைகளுக்கான அபாகஸ் உள்ளிட்ட பயிற்சிகள் --–- குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, ஏற்பாடு: பொதுநுாலக இயக்ககம், காலை 11:00 மணி முதல்.
