ADDED : மே 20, 2026 11:53 PM
கோயில் * வைகாசி வசந்த உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன் புது மண்டபத்தில் எழுந்தருளல், மாலை 6:00 மணி.
* வைகாசி திருவிழா – 4ம் நாள்: ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், சப்பரத்தில் அம்மன் புறப்பாடு, காலை 10:45 மணி, கமலாசனத்தில் அம்மன் வீதியுலா, இரவு 7:00 மணி.
* வைகாசி திருவிழா – கொடியேற்றம்: திருமறைநாத சுவாமி கோயில், திருவாதவூர், காலை 9:30 மணிக்கு மேல் 10:00 மணிக்குள், சிம்மாசனத்தில் அம்மன், சுவாமி எழுந்தருளல், காலை 9:00 மணி, ரிஷப வாகனத்தில் அம்மன், சுவாமி எழுந்தருளல், இரவு 7:00 மணி.
* வைகாசி திருவிழா: ராஜகாளியம்மன் கோயில், மேட்டுப்புஞ்சை, சிந்தாமணி, மதுரை, சேஷ வாகனத்தில் அம்மன் வீதியுலா, மாலை 5:00 மணி.
* வைகாசி பெருவிழா, அக்னி வசந்த விழா: திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை, அம்மன் இந்திராணி அலங்காரத்தில் திருப்பல்லக்கில் எழுந்தருளல், காலை 9:00 மணி, தருமராஜ சுவாமிக்கு பீமராஜர் அலங்காரம், இரவு 7:00 மணி.
* ஆண்டு உற்ஸவம் – மஞ்சள் நீராட்டு: பத்ரகாளியம்மன் கோயில், திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.
* வருடாபிஷேகம்: சந்தனமாரியம்மன் கோயில், சோணைகோவில் தோப்பு, ஆரப்பாளையம், மதுரை, யாகசாலை பூஜை, அதிகாலை 5:00 முதல் காலை 7:00 மணி, கணபதி ஹோமம், கலச பூஜை, அம்மனுக்கு 21 சிறப்பு மகா அபிஷேகம், காலை 8:00 முதல் 10:30 மணிக்குள், அன்னதானம், மதியம் 12:00 மணி.
* காஞ்சி மஹா பெரியவர் விக்ரஹம், வெள்ளிப் பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி: மஹா பெரியவர் கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, பூஜைகள் புரிவோர்: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.
பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி, வாசிநாதம் அடியாரின் சத்சங்கம், மாலை 6:00 மணி.
* தியானமும் யோகமும்: நிகழ்த்துபவர் – பிரஜாபதி பிரம்மாகுமாரி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
* திருவாசகம்: நிகழ்த்துபவர் – வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி * முத்தமிழ் விழா: விவசாயக்கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் (பொ) சந்திரமணி, சிறப்பு விருந்தினர்: கோவை வேளாண் பதிவாளர் சுப்ரமணியன், காலை 9:00 மணி, திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதியின் சொற்பொழிவு, காலை 11:30 மணி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தனின் பட்டிமன்றம், மதியம் 12:30 மணி, கலை நிகழ்ச்சிகள், மதியம் 3:30 மணி முதல்.
பொது * ‘தன்னம்பிக்கையே ஆளுமையின் அடையாளம்’ – சிறப்புரை: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், பேசுபவர்: யோகா ஆசிரியர் பிரபு, பங்கேற்பு: படிப்பிடை பயிற்சி மாணவர்கள், காலை 10:30 மணி.
* கீற்றுக்கலை, போகோ ஆர்ட், களிமண் ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகள் – குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, ஏற்பாடு: பொது நுாலக இயக்ககம், காலை 11:00 மணி முதல், பெண்களுக்கான அழகுக் கலை பயிற்சி, மதியம் 3:00 மணி.
* கேட்போர் மையம் நிகழ்வு: திருவள்ளுவர் மன்றம், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், மதுரை, கருத்துரை: அறக்கட்டளைகள் ஆலோசனைக்குழு தலைவர் ராஜ உமாராணி, சிறப்புரை: ஆசிரியை சிவசத்யா, மாலை 4:30 மணி.
மருத்துவம் * தோல் லேசர் நவீன மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.
யோகா, தியானம் * உடல், மனதிற்கு ஆரோக்கியம் தரும் யோகா பயிற்சி: ஈஷா யோக மையம், பீ.பி.குளம், மதுரை, காலை 6:00 முதல் 8:30 மணி வரை, காலை 10:00 முதல் மதியம் 12:30 மணி வரை, ஆரப்பாளையம் மையம்: மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை.
