தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி / மே 20 க்குரியது 

இன்றைய நிகழ்ச்சி / மே 20 க்குரியது 

இன்றைய நிகழ்ச்சி / மே 20 க்குரியது 


ADDED : மே 19, 2026 11:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2026 11:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில் * வைகாசி திருவிழா -3ம் நாள்: ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், சப்பரத்தில் அம்மன் புறப்பாடு, காலை 9:00 மணி, யாளி வாகனத்தில் அம்மன் வீதியுலா, இரவு 9:00 மணி.

* வைகாசி உற்ஸவம்: பத்ரகாளியம்மன் கோயில், திருப்பரங்குன்றம், பொங்கல் வைத்தல், அதிகாலை 5:00 மணி, அம்பாள் மேளதாளத்துடன் வீதியுலா, மாலை 4:00 மணி, முளைத்த கரைத்தபின் கருப்பணசாமிக்கு சக்தி கிடாய் வெட்டுதல், இரவு 8:00 மணிக்கு மேல்.

* வைகாசி திருவிழா – வாஸ்து சாந்தி: திருமறைநாதர் கோயில், திருவாதவூர், இரவு 7:00 மணி.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.

பக்தி சொற்பொழிவு * திருவருட்பா: நிகழ்த்துபவர் –- விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: காசி விஸ்வநாதன் நினைவு அறக்கட்டளை, இரவு 7:00 மணி.

* ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்: நிகழ்த்துபவர் -– சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண சமாஜம், பங்கஜம் காலனி, மதுரை, மாலை 6:30 மணி.

* மனிதர்களில் பக்திமான் யார் என்பதற்கு பகவான் கிருஷ்ணரின் பதில் என்ன: நிகழ்த்துபவர் -– அமுதா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் –  டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

பொது * புதிய வருமான வரிச்சட்டம் 2025 குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: சங்கத் தலைவர் ஜெகதீசன், சிறப்பு விருந்தினர்: மதுரை வருமான வரி கமிஷனர் ஸ்ரீலேகா, கவுரவ விருந்தினர்: முதன்மை வருமான வரி கமிஷனர் வசந்தன், மதியம் 3:30 மணி.

* யோகாவும், இயற்கை வாழ்வியலும்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலாளர் நந்தாராவ், சிறப்புரை: யோகா ஆசிரியர் பழனிக்குமார், முன்னிலை: கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், காலை 10:30 மணி.

* குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, ஏற்பாடு: பொதுநுாலக இயக்ககம், காலை 11:00 மணி முதல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us