ADDED : மே 15, 2026 11:33 PM
கோயில்
* சனிக்கிழமை சிறப்பு பூஜை: கிருஷ்ணன் கோயில், யூனியன் ஆபீஸ் எதிரில், மேலுார், ஏற்பாடு: மேலுார் யாதவர் மகாசபை, மாலை 6:00 மணி.
* சனிக்கிழமை சிறப்பு பூஜை: கிருஷ்ணன் கோயில், மந்தைத் திடல் வளாகம், கீழையூர், ஏற்பாடு: கீழையூர் யாதவர் மகாசபை, மாலை 6:00 மணி.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் – சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் ‘சத்தர்ஸனம்’ விளக்கவுரை, காலை 9:15 மணி.
* தாயுமானவர்: நிகழ்த்துபவர் – சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* சத்சங்கம், ஆசிரம பிரார்த்தனை, திருப்புகழ் பஜனை: நிகழ்த்துவோர் – திருப்புகழ் சபை அன்பர்கள், தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி.
* உலக அமைதிக்காக ஹரிநாம சங்க உற்ஸவம் – மஹா சங்கீர்த்தனம்: கிருஷ்ண பலராமர் கோயில் – இஸ்கான் மையம், திருப்பாலை, பங்கேற்பு: கீர்த்தன கலைஞர்கள், பக்தர்கள், ஆன்மிக அமைப்புகள், காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை.
* பலஹாரிணி காளி பூஜை: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, சிறப்பு பூஜை, பஜனை, இரவு 7:00 மணி, சிறப்பு ஆரத்தி, புஷ்பாஞ்சலி, இரவு 8:30 மணி.
பள்ளி, கல்லுாரி
* பட்டமளிப்பு விழா: வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கல்வியியல் உளவியல் துறைத் தலைவர் சிவசக்தி ராஜம்மாள், காலை 10:30 மணி.
பொது
* ‘மேஜிக் மணி தமிழ்நாடு சம்மிட் 2026 – மதுரை பதிப்பு’ முதலீடு, சந்தைகள், சொத்து உருவாக்கம் குறித்து நிதி சார்ந்த கருத்தரங்கம்: ஓட்டல் கோர்ட் யார்டு மேரியட், மதுரை, சிறப்புரை: நிதித்துறை சார்ந்த நிபுணர்கள் ஷியாம் சேகர், கார்த்திக்ராஜ் லட்சுமணன், சரவணன், குமரவேல், ரவுநக் கவுடி, நவீன் சந்திரமோகன், ஞானசேகர் தியாகராஜன், சிவராமகிருஷ்ணன், ரெஜி தாமஸ், முகமது முனீர், ஏற்பாடு: ஐ.சி.ஐ.சி.ஐ., ப்ருடென்ஷியல் மியூச்சுவல் பண்ட், காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.
* விழித்திரை புற்றுநோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி: அண்ணா பஸ் ஸ்டாண்ட் முதல் அரவிந்த் கண் மருத்துவமனை வரை, மதுரை, முன்னிலை: டாக்டர் உஷா கிம், சிறப்பு விருந்தினர்: போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா, ஏற்பாடு: அரவிந்த் கண் மருத்துவமனை, காலை 8:00 மணி.
* மாணவர்களுக்கான ஹிந்து சமய கலாசாரம், பண்பாடு குறித்து கோடைகால இலவச பயிற்சி வகுப்பு: ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் வேத பாடசாலை, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, முனிச்சாலை, மதுரை, காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
* இசை நிகழ்ச்சி: ஓட்டல் தமிழ்நாடு (பாண்டியன்), அழகர்கோவில் ரோடு, மதுரை, பாட்டு – முரளி, வயலின் – ரவிந்திரன், மிருதங்கம் – ரவி, ஏற்பாடு: ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 5:30 மணி.
* பொம்மலாட்டம், சதுரங்கம், ஜும்பா நடனம் உள்ளிட்ட பயிற்சிகள் – குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, ஏற்பாடு: பொது நுாலக இயக்ககம், காலை 11:00 மணி முதல், பெண்களுக்கான ஆரி தையல் பயிற்சி, மதியம் 3:00 மணி.
* ஆரோக்கிய சந்தை – சிறுதானிய உணவுத் திருவிழா: காந்தி மியூசியம், மதுரை, சிறப்பு விருந்தினர்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையம் வளங்கள் மேம்பாட்டுத் துறைத் தலைவர் சுந்தர்ராஜ், மியூசிய செயலாளர் நந்தா ராவ், ஏற்பாடு: கிரீன் பெம், காலை 10:00 மணி.
* பாரம்பரிய மீன்பிடித் திருவிழா: ஐந்து கோயில் முத்தன் சுவாமி கண்மாய், கள்ளந்திரி, முன்னிலை: ஐந்து ஊர் அம்பலக்காரர் பொன்வேல்முருகன், பங்கேற்பு: கள்ளந்திரி சுற்றுவட்டார 5 ஊர் மக்கள், காலை 7:00 மணி.
* த.வெ.க., எம்.எல்.ஏ.,க்கள் கருப்பையா, கார்த்திகேயன், கோபிசனுக்கு பாராட்டு விழா: செய்தியாளர் அரங்கம், பிரஸ் காலனி, மாட்டுத்தாவணி, மதுரை, சிறப்பு விருந்தினர்: ரோட்டரி மாவட்ட கவர்னர் கார்த்திக், ஏற்பாடு: மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி கிளப், மதுரை ராயல் ரோட்டரி கிளப், இரவு 8:00 மணி.
விளையாட்டு
* மாநில அளவிலான கூடைப்பந்து, ஹாக்கி, கபடி போட்டிகளுக்கு 6 முதல் 9ம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களுக்கான தேர்வு: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 7:00 மணி முதல்.
யோகா, தியானம்
* கோடைகால யோகா பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், ஒருங்கிணைப்பாளர்: தேவதாஸ், பயிற்சி அளிப்பவர்கள்: தாரணி, சக்தி, இருபாலருக்கு மாலை 4:30 மணி, பெண்களுக்கு காலை 10:30 மணி.
கண்காட்சி
* கோடை மேளா – பாதி விலையில் பர்னிச்சர்கள் விற்பனை: மடீட்சியா ஹால், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.
