ADDED : ஜூன் 01, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பிரம்மா குமாரிகள் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஜெயஸ்ரீ வரவேற்றார்.
பொன்னுலக மறுமலர்ச்சிக்கான ஆன்மிக விழிப்புணர்வு எனும் தலைப்பில் ராஜயோக ஆசிரியை ஆஷா பேசினார். வியாபாரிகள் நலச்சங்க செயலாளர் பெருமாள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாணவிகளின் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடந்தன. உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முன்னாள் சி.இ.ஓ., விஷ்ணுபிரசாத் தொகுத்து வழங்கினார். பழனியப்பன் நன்றி கூறினார்.
