ADDED : மே 27, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
மேலுார்: திருவாதவூர் வெள்ளமுத்தன்பட்டி ராஜ்குமார் 33.
கார் ஆக்டிங் டிரைவர். இவருக்கு மனைவி, 2 வயது மகன் உள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி ஒத்தக்கடையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். நேற்று திருவனேந்தல் கண்மாயினுள் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ராஜ்குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்தது தெரிந்தது. அதே பகுதியைச் சேர்ந்த அருள் 35, நவநீதனிடம் 37, விசாரணை நடக்கிறது.
