சாலை பணியாளர் பிரச்னைக்கு தீர்வு நெடுஞ்சாலைத்துறை சங்கம் கோரிக்கை
சாலை பணியாளர் பிரச்னைக்கு தீர்வு நெடுஞ்சாலைத்துறை சங்கம் கோரிக்கை
ADDED : மே 12, 2026 05:28 AM
கரூர், சாலை பணியாளர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு தீர்வு காண வேண்டும் என, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
த.வெ.க., தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள பொதுமக்கள் நலன் சார்ந்த, சமூக நலன் அரசு ஊழியர்களின் நலன் சார்ந்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றித் தர வேண்டும். கடந்த, 20 ஆண்டுகளாக, நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்கிய காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என போராடி வருகிறோம். இது குறித்து, நீதிமன்ற தீர்ப்புக்கு பின், இதுவரை எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. சாலை பணியாளர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
