/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தார்ச்சாலை அமைக்க தாமதம்: சிமென்ட் ஜல்லிகற்களால் பொதுமக்கள் கடும் அவதி

ADDED : ஜூன் 25, 2025 01:41 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 01:41 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்டம், புஞ்சை புகழூர் காவிரியாற்று பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் இருந்து பொதுமக்கள், காவிரியாற்றுக்கு குளிக்கவும், துணிகள் துவைக்கவும் நாள்தோறும் சென்று வருகின்றனர்.

மேலும், காவிரியாற்று பகுதியில் நீரேற்றும் நிலையங்களுக்கும், ஊழியர்கள் சென்று வருகின்றனர். ஆனால், காவிரியாற்றுக்கு செல்லும் சாலை, குண்டும், குழியுமாக இருந்தது. இதனால், பொதுமக்கள் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். புதிதாக தார்ச்சாலை அமைக்க, பல மாதங்களுக்கு முன் சிமென்ட் கலவை முதலில் கொட்டப்பட்டு சமன்படுத்தப்பட்டது.

ஆனால், இதுவரை தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. சமீபத்தில், புகழூர் பகுதியில் பெய்த மழை காரணமாக, சிமெண்ட் கரைந்து, வெறும் ஜல்லிக்கற்கள் மட்டும் சாலையில் உள்ளன. இதனால், பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே, புகழூரில் இருந்து காவிரியாற்றுக்கு செல்லும் பகுதியில், விரைவாக தார்ச்சாலை அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.