/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செய்யாற்றில் தண்ணீர் வரவு விவசாயிகள் மகிழ்ச்சி

/

செய்யாற்றில் தண்ணீர் வரவு விவசாயிகள் மகிழ்ச்சி

செய்யாற்றில் தண்ணீர் வரவு விவசாயிகள் மகிழ்ச்சி

செய்யாற்றில் தண்ணீர் வரவு விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : ஜூன் 02, 2025 02:07 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகாவில் உள்ள பெருநகரில் தொடங்கி, 20 கி.மீ., துாரத்திற்கு செய்யாறு செல்கிறது. இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, சுற்றுவட்டார விவசாய நிலங்கள் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு வாயிலாக நீர்ப்பாசனம் பெறுகிறது.

மேலும், செய்யாற்றிலிருந்து ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் வாயிலாக குடிநீர் உறிஞ்சி, குழாய் வாயிலாக அருகிலுள்ள கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை, செங்கம், ஆரணி, செய்யாறு ஆகிய பகுதிகளில், ஒரு வாரமாக மழை பெய்து வந்தது. இதனால், மழை வெள்ளநீர் பெருநகர் செய்யாற்றில் வர துவங்கி உள்ளது.

செய்யாறு கோடை வெயில் தாக்கத்தினால் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. தற்போது, செய்யாற்றில் தண்ணீர் வருவதால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

எனவே, செய்யாற்றில் தண்ணீர் வருவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.