/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு கல்லுாரியில் வரும் 9ம் தேதி கலந்தாய்வு

/

அரசு கல்லுாரியில் வரும் 9ம் தேதி கலந்தாய்வு

அரசு கல்லுாரியில் வரும் 9ம் தேதி கலந்தாய்வு

அரசு கல்லுாரியில் வரும் 9ம் தேதி கலந்தாய்வு


ADDED : ஜூன் 05, 2025 06:46 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 9ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்குகிறது.

திருக்கோவிலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு மாணவர் சேர்க்கை நேற்று நடந்தது. இதைத்தொடர்ந்து வரும் 9ம் தேதி தமிழ், ஆங்கிலம், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.

வரும், 10ம் தேதி வேதியியல், கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு பொது கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இது குறித்து மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் காலை 9:30 மணிக்கு முன்னதாகவே, சேர்க்கை நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும்.

'டவுன் லோட்' செய்யப்பட்ட விண்ணப்பம், 10, 11 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் அசல் மற்றும் 2 நகல்கள், பள்ளி மாற்றுச்சான்றிதழ், சாதி சான்றிதழ் அசல் மற்றும் இரண்டு நகல்கள், பாஸ்போர்ட் அளவு மூன்று புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அடையாள அட்டை அசல் மற்றும் இரண்டு நகல்களுடன், உரிய சேர்க்கை கட்டணத்தையும் எடுத்துவர வேண்டும் என கல்லுாரி முதல்வர் மகாவிஷ்ணு தெரிவித்துள்ளார்.