/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஒரு மாதத்தில் 15 பைக் திருட்டு; சங்கராபுரத்தில் அட்டகாசம்
/
ஒரு மாதத்தில் 15 பைக் திருட்டு; சங்கராபுரத்தில் அட்டகாசம்
ஒரு மாதத்தில் 15 பைக் திருட்டு; சங்கராபுரத்தில் அட்டகாசம்
ஒரு மாதத்தில் 15 பைக் திருட்டு; சங்கராபுரத்தில் அட்டகாசம்
ADDED : செப் 16, 2025 11:43 PM
சங்கராபுரம்; சங்கராபுரம் பகுதியில் தொடரும் பைக் திருட்டால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமீப காலமாக திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்தநிலையில், பைக் திருட்டு சம்பவங்களும் அதிகரிக்க துவங்கிவிட்டது.
சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒருமாதமாக பல கிராமங்களில் 15க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடு போய் உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் வீடுகளின் முன்பு நிறுத்தப்படும் பைக்குகள் கள்ளச்சாவி கொண்டு திருடப்படுகிறது. இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், பைக் திருட்டு ஆசாமிகள் கைது செய்யப்படவில்லை.
சங்கராபுரம் பகுதியில் தொடரும் பைக் திருட்டினை தடுக்க இரவுநேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.