தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சூறைக்காற்றால் எஸ்.பி., ஆபீசில் சாய்ந்த மரம்

சூறைக்காற்றால் எஸ்.பி., ஆபீசில் சாய்ந்த மரம்

சூறைக்காற்றால் எஸ்.பி., ஆபீசில் சாய்ந்த மரம்


ADDED : மே 23, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 06:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு ப.செ.பார்க் அருகில், எஸ்.பி., அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மனு அளிக்க வரும் மக்கள் அமர்வதற்காக அலுவலக நுழைவுவாயிலில், ஷெட் அமைத்து, இருக்கை போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் ஷெட் அருகில் இருந்த மரத்தின் கிளைகள் உடைந்து விழுந்ததில், கூரை உடைந்து சேதமானது. சம்பவத்தின் போது அப்பகுதியில் மக்கள், போலீசார் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் நிகழவில்லை. உடைந்த மரக்

கிளைகளை நேற்று போலீசார் அப்புறப்படுத்தினர்.* ஆப்பக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி முதல் நள்ளிரவு, 1:00 மணி வரை, பலத்த இடி மற்றும் காற்றுடன் கனமழை பெய்தது. ரைஸ் மில் பஸ் ஸ்டாப்பில் இருந்து முனியப்பன்பாளையம் செல்லும் சாலை வெள்ளாள

பாளையத்தில், பழமையான புங்கமரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மரத்தை அப்புறப்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us