ADDED : ஜூன் 17, 2026 06:08 AM
அ நிறம் | அளவு
பவானி:பவானி
அருகே காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம் பகுதிகளில், மூன்று
சாயப்பட்டறைகள் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக
செயல்படுகிறது.
இவற்றில் இருந்து சாயக்கழிவு நீர் நேரடியாக பவானி
ஆற்றில் கலப்பதாக, ஈரோடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு
புகார் சென்றது. இதையடுத்து பவானி போலீசார் துணையுடன், மாசு
கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று வந்தனர். சட்டவிரோதமாக
இயங்கிய மூன்று சாயப்பட்டறைகளை இடித்து தரைமட்டமைாக்கினர்.
