UPDATED : மே 09, 2026 12:03 AM
ADDED : மே 08, 2026 11:50 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்:பிளஸ் 2 தேர்வில் காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பி.நவீனா, ஜி.சபரீதரன் 600 க்கு 577 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளனர்.
மாணவன் எம்.ஹரிவர்ஷன் 576 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம், மாணவி தேஜஸ்வினி 573 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். மாணவர்கள் 20 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 51 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி மாணவர்களை விவேகானந்தா கல்வி குழும தலைவர் கே.ரங்கசாமி, பள்ளி துணைத் தலைவர் கலைவாணி, தலைமை ஆசிரியர் ரங்கசாமி, உதவி தலைமை ஆசிரியை செல்வராணி பாராட்டினர்.
