/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழைநீரால் திக்குமுக்காட செய்யும் சுரங்கபாதை
/
மழைநீரால் திக்குமுக்காட செய்யும் சுரங்கபாதை
ADDED : செப் 24, 2025 06:00 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் இருந்து மாசிலாமணிபுரம், கோவிந்தராஜ் நகர், சந்துரு நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் சுரங்கபாதையினுள் 3 அடி உயரம் வரை மழைநீர் தேங்கி நின்றது. மழை ஓய்ந்து மூன்று நாட்களாகியும் சுரங்கபாதையில் நீர் வடியாமல் இருக்கிறது. தற்போது ஒரு அடி உயரம் தேங்கி நிற்கும் நீரில் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றன. இதுவே கனமழையின் போது இவ்வழியே வாகன போக்குவரத்து தடைபடும் அளவிற்கு நீர் தேங்குவதால் மாசிலமணிபுரம், தாமரை நகர், கோவிந்தராஜ் நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகின்றனர். சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காதவாறு வடிகால் ஓடை அமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.