ADDED : மே 21, 2026 04:43 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காசநோய் மையம் சார்பில் மாவட்ட சிறையில் கைதிகளுக்கான காசநோய் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
மாவட்ட துணைஇயக்குனர் (காச நோய் ) சந்திரி பிரியா, சிறைக்கண்காணிப்பாளர் பிரகாஷ் துவங்கி வைத்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார், மாவட்ட பொது, தனியார் ஒருங்கிணைப்பாளர் வில்லங்கர், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சிவசுந்தர், ராஜசேகரன் பங்கேற்றனர்.
