/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெரியஅரவங்குறிச்சியில் புரவி எடுப்பு
/
பெரியஅரவங்குறிச்சியில் புரவி எடுப்பு
ADDED : செப் 21, 2025 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: பெரியஅரவங்குறிச்சி முத்துக்கருப்பணசுவாமி கோயில் புரவி எடுப்பு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி நேற்று மதியம் ஊர் மந்தையில் சுவாமிக்கு கண் திறக்க சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
மாலையில் வாணவேடிக்கைகளுடன் மின் ரதத்தில் முத்துக் கருப்பணசுவாமி எழுந்தருள குதிரை, நாய், காளை, மதிலை சிலைகளுடன் ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. சுற்று கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.