ADDED : மே 14, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்க ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் தனசேகரன் அறிக்கை: வழிபாட்டு தலங்கள், கல்விக்கூடங்கள், பஸ் ஸ்டாண்டில் இருந்து சுமார் 500 மீட்டர் எல்லைக்குள் செயல்பட்டு வரும் 717 மதுபான கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட முதல்வர் விஜய் உத்தரவு வழங்கி உள்ளார்.
இதை டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி சார்பில் வரவேற்கிறோம், அதேநேரம் மூடப்படும் கடைகளில் பணிபுரியும் ஆயிரம் பணியாளர்களுக்கு பணியிழப்பு ஏற்படும். இவர்களின் வாழ்வாதாரத்தை கணக்கில்கொண்டு அரசின் பிறத்துறைகளில் பணிபுரிய மாற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என கேட்டுள்ளார்.
