டூவீலருக்கு தீ வைப்பு
சத்திரப்பட்டி: வடக்கு சத்திரப்பட்டியில் வசித்து வருபவர்  திண்டுக்கல் தொட்டனது பகுதியை  சேர்ந்த கட்டட தொழிலாளி  கணேசன் 40.    வீட்டு முன் நிறுத்தியிருந்த டூவீலரை   சிலர் தீ வைத்து எரித்து சென்றனர் .சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
இருவர் துாக்கிட்டு தற்கொலை
தொப்பம்பட்டி: நரிகல்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ் 20.   குடும்பப் பிரச்னை காரணமாக கோரிக்கடவில் உள்ள  உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.  நேற்று வீட்டில் துாக்கிட்டு இறந்தார்.   கீரனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
*ராஜம்பட்டி  தனியார் சேம்பரில் ஒரிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டத்தை  சேர்ந்த ப சேசதேவ் மாஜி 18, பணிபுரிந்து வந்தார்.  குடும்ப  பிரச்னை காரணமாக  காற்றாலையில் துாக்கிட்டு இறந்தார். கீரனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் விபத்தில் இருவர் பலி
எரியோடு: ஆர்.கோம்பை இருளகவுண்டன்பட்டி சேர்ந்தவர் கோவிந்தராஜ் 33. டூவீலரில் நேற்று மதியம் கோவிலுார் குஜிலியம்பாறை ரோட்டில் சென்ற போது ராமநாதபுரம் சுப்புராஜ் ஓட்டி வந்த டூவீலருடன் மோதியது. இருவரும் ஹெல்மெட் அணியவில்லை.  காயமடைந்த  கோவிந்தராஜ் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். சுப்புராஜ்  சிகிச்சையில் உள்ளார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
கீரனுார்: திருப்பூர் மாவட்டம் கோயில் வழி பகுதியை  சேர்ந்த  முருகானந்தம் 23, டூவீலரில் பழநி புது தாராபுரம் ரோடு வழியாக கொடைக்கானல்  சென்றார். (ஹெல்மெட் அணியவில்லை)   நிலைத்தடுமாறி விழுந்ததில்  இறந்தார். கீரனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தந்தையை வெட்டிய மகன் கைது
திண்டுக்கல்: பாரதிபுரம் சந்தைரோடு பகுதியை சேர்ந்தவர்  கூலி தொழிலாளி   பிச்சைப்பாண்டி 55.இவரின் மகன் விஜயக்குமார் 29.   இருவர் இடையே   குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.   வழக்கம்போல வாய் தகராறு  ஏற்பட்டது.  ஆத்திரமடைந்த விஜயக்குமார்  தந்தையை அரிவாளால்    வெட்டினார்.   தெற்கு போலீசார்  விஜயக்குமாரை கைது செய்தார்.
அலைபேசி பறித்த இருவர் கைது
திண்டுக்கல்: ஆர்.எம். காலனியை சேர்ந்தவர்  பேராசிரியை  வித்யா பாரதி.    டூவீலரில் வந்த  நபர்கள்  இவரது அலைபேசியை பறித்து சென்றனர்.  நகர் மேற்கு  இன்ஸ்பெக்டர் வினோதா விசாரித்தார். சி.சி.டி.வி.,பதிவு  படி   தாமரைப்பாடியை சேர்ந்த மதன் 24, திண்டுக்கல் ஏர்போர்ட் நகரை சேர்ந்த ஜெயபிரகாஷ் 22,  ஆகியோரை கைது செய்தனர்.   3 அலைபேசி, டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.

