/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின் இணைப்புக்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பழநி உதவி பொறியாளர் கைது
/
மின் இணைப்புக்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பழநி உதவி பொறியாளர் கைது
மின் இணைப்புக்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பழநி உதவி பொறியாளர் கைது
மின் இணைப்புக்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பழநி உதவி பொறியாளர் கைது
ADDED : மே 01, 2025 01:09 AM

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி அங்கன்வாடிக்கு மின் இணைப்பு வழங்க ரூ. 5 ஆயிரம் வாங்கிய மின் உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
பழநி ஆர்.எப்.ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலக உதவி பொறியாளர் சிவக்குமார் 46 .
இவரிடம் பழநி பாலசமுத்திரம் பகுதியில் கட்டிய அங்கன்வாடி மையத்திற்கு மின்இணைப்பு பெற ஒப்பந்ததாரர் முருகானந்தம் 44, விண்ணப்பித்துள்ளார். இதற்காக முருகானந்தத்தின் சகோதரர் மருதராஜ் 42, உதவி பொறியாளர் சிவகுமாரை தொடர்பு கொண்டபோது ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து மருதராஜ் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தல்படி மருதராஜ் நேற்று மின் வாரிய அலுவலகத்தில் இருந்த சிவக்குமாரிடம் ரூ. 5 ஆயிரம் கொடுத்துள்ளார். அப்பணத்தை வாங்கிய சிவக்குமாரை அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி., நாகராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.