/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓணத்தால் களை கட்டியது ஒட்டன்சத்திரம் மார்க்கெட்; ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு வர்த்தகம்

ADDED : செப் 03, 2025 09:25 AM

ஒட்டன்சத்திரம்; ஓணத்தால் களைகட்டிய திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி காய்கறி மார்க்கெட்டில் ரூ.10 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. காய்கறிகள் விலையும் அதிகரித்திருந்தது.
கேரளாவில் செப்., 5 ல் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதில் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதால் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே காய்கறிகளை அம்மாநில வியாபாரிகள் கொள்முதல் செய்ய துவங்கினர். நேற்று மட்டும் கேரளா வியாபாரிகள் அதிக அளவு காய்கறிகளை கொள்முதல் செய்ததால் ஒரே நாளில் ரூ. 10 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
இதை தொடர்ந்து ஒரு கிலோ ரூ.15 க்கு விற்ற வெண்டைக்காய் நேற்று ரூ.35, ரூ.25 க்கு விற்ற பயிறு வகைகள் விலை இருமடங்கு அதிகரித்து ரூ.50, ரூ.5 க்கு விற்ற சுரைக்காய் ரூ.7 க்கு விற்பனையானது. பல காய்கறிகளின் விலையும் அதிகரித்திருந்தது.
காந்தி காய்கறி மார்க்கெட் செயலாளர் ராசியப்பன் கூறியதாவது: தங்கச்சியம்மாபட்டி காந்தி மார்க்கெட்டில் வழக்கமாக ரூ.6 கோடிக்கு வர்த்தகம் நடக்கும். ஓணத்தை முன்னிட்டு கேரள வியாபாரிகள் காய்கறிகளை அதிகம் கொள்முதல் செய்ததால் ரூ. 10 கோடிக்கு வர்த்தகம் நடந்தது என்றார்.