/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடிநீர் தொட்டிகள் பராமரிப்பில் அலட்சியத்தால்... ஆபத்து: தட்டிக்கழிக்கும் உள்ளாட்சிகளால் பெரும் பாதிப்பு
/
குடிநீர் தொட்டிகள் பராமரிப்பில் அலட்சியத்தால்... ஆபத்து: தட்டிக்கழிக்கும் உள்ளாட்சிகளால் பெரும் பாதிப்பு
குடிநீர் தொட்டிகள் பராமரிப்பில் அலட்சியத்தால்... ஆபத்து: தட்டிக்கழிக்கும் உள்ளாட்சிகளால் பெரும் பாதிப்பு
குடிநீர் தொட்டிகள் பராமரிப்பில் அலட்சியத்தால்... ஆபத்து: தட்டிக்கழிக்கும் உள்ளாட்சிகளால் பெரும் பாதிப்பு
ADDED : செப் 12, 2025 04:30 AM

மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், 306 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் அத்தியாவசிய பணிகளில் குடிநீர் வினியோகத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல்வேறு திட்டங்களில் நிதி ஒதுக்கீட்டை அரசு வழங்குகிறது. இருப்பினும் இதனை முறையாக செயல்படுத்துவதில் உள்ளாட்சி நிர்வாகங்கள் அலட்சியம் காட்டி வருகின்றன. செயலாக்க நிலையில் உள்ள அரசுத்துறை அதிகாரிகளும் நடைமுறை பிரச்னைகளை காரணம்கூறி கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். ஜல்ஜீவன் மிஷன், பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் உள்ளிட்டவை பயன்பாட்டில் இருந்த போதும் தண்ணீருக்காக மக்கள் பரிதவிக்கும் அவலம் பரவலாக அனைத்து உள்ளாட்சிகளிலும் நீடித்து வருகிறது. கணிசமான மழைப்பொழிவு உள்ள சூழலிலும் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதில்லை.
இந்நிலையில் சொற்ப அளவிலான குடிநீர் வினியோக பணியிலும் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியப் போக்கு அப்பாவி பொதுமக்களை பாதிப்படைய செய்யும் அவலம் தொடர்கிறது. தண்ணீர் வினியோகத்திற்கான தரைநிலை, மேல்நிலை தொட்டிகள் அனைத்தும் உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பில் உள்ளன. புதிய குழாய் அமைத்தல், தண்ணீர் வினியோக பைப் லைன் ஏற்படுத்துதல் என நிதி ஒதுக்கீட்டை செலவிடுவதில் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளின் அதிகார நிலையில் இருப்போர் கவனம் செலுத்துகின்றனர். அனைத்து வகை தொட்டிகளையும் உரிய நேரத்தில் பராமரிப்பது இல்லை. பாசி படர்ந்த நிலையில் பல கிராமங்களில் அசுத்தம் கலந்த தண்ணீர் பிரச்னை தற்போது வரை நீடிக்கிறது. இவற்றை மூடி மறைக்க முயற்சிக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதற்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்வதற்கான பணிகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.
பெரும்பாலான மேல்நிலை தொட்டிகள் துாண்கள் சேதமடைந்து பக்கவாட்டு சுவர் விரிசல்களுடன் அவ்வப்போது பெயர்ந்து விழுந்து விபத்துகளை ஏற்படுத்த தவறுவதில்லை.
இவற்றை பராமரிக்க செலவினை சீட்டை முன் வைக்கும் உள்ளாட்சி நிர்வாகங்கள் அதனை முறையாக செயல்படுத்துவதில்லை.
மாவட்ட நிர்வாகம் குடிநீர் தொட்டகளை பராமரிப்பதுடன் பயன்பாடின்றி விபத்து தொற்று பரவலை ஏற்படுத்தும் தொட்டிகளை அகற்ற முன்வர வேண்டும்.