ADDED : செப் 12, 2025 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானலில் இடைவிடாது பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதித்தது. சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொடைக்கானல், தாண்டிக்குடியில் நேற்று காலை முதலே இடைவிடாது மிதமான மழை பெய்தது.
சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் மழையால் சுற்றுலா பயணிகள் வரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது. நகரை பனிமூட்டம் சூழ்ந்து வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. ஏரி சாலையில் மரம் விழுந்து சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.