/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மலை ரோட்டில் ராட்சத பள்ளங்கள்: கண்டுக்காத நெடுஞ்சாலைத்துறை
/
மலை ரோட்டில் ராட்சத பள்ளங்கள்: கண்டுக்காத நெடுஞ்சாலைத்துறை
மலை ரோட்டில் ராட்சத பள்ளங்கள்: கண்டுக்காத நெடுஞ்சாலைத்துறை
மலை ரோட்டில் ராட்சத பள்ளங்கள்: கண்டுக்காத நெடுஞ்சாலைத்துறை
ADDED : செப் 23, 2025 04:35 AM

தாண்டிக்குடி: தாண்டிக்குடி வத்தலக்குண்டு ரோட்டோரம் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றன.
சித்தரேவு தாண்டிக்குடி மலை ரோடு 30 கி.மீ., . குறுகிய ஒரு வழி பாதையில் எதிரேவரும் வாகனங்களுக்கு இடம் கொடுக்க முடியாத நிலையில் வாகனங்கள் தடுமாறுகின்றன.ஆபத்தான பள்ளத்தாக்குகள், வளைவுகள் நிறைந்துள்ளன. கனமழையால் கானல்காடு,புல்லாவெளி,தடியன்குடிசை, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு உள்ளிட்ட இடங்களில் ரோட்டோர தடுப்புசுவர்கள் சேதமடைந்து பக்கவாட்டில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆத்துார் கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோடுகளில் விபத்து பகுதிகளில் தற்காலிகமாக கற்களை வைத்துள்ளனர்.விபத்து குறித்து எச்சரிக்கை பலகைகள் ஏதுமின்றி வாகனங்கள் நாள்தோறும் இதை கடந்து செல்கின்றன.
6 மாதத்திற்கு மேலாக இந்நிலை நீடித்து வரும் நிலையில் நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க முன்வரவில்லை. விபத்து அபாய பகுதிகளில் முதலில் மணல் மூடைகளை கொண்டு பள்ளங்களை சீரமைத்து நிரந்தர கட்டமைப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.