ADDED : ஜூன் 13, 2026 01:45 AM

அ நிறம் | அளவு
கொடைரோடு: கொடைரோடு இந்திரா நகர் காளியம்மன், பகவதியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மேளதாளம், வாணவேடிக்கையுடன் அம்மன் பூங்கரக ஊர்வலம் நடந்தது.
தொடர்ந்து கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு, தீச்சட்டி, பால்குடம், பொங்கல், கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று அம்மன் ஊர்வலத்தில் வழிநெடுகிலும் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
